பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. பெயர்கள் கபிலவாஸ்து விலே பிறந்த புத்தரைச் சுட்டிய வையல்லவென்க . அவை முன்னுள்ள புத்த சமயிகளைச் சுட்டியனவேயாம். கபிலவாஸ்துவிலே பிறந்த புத்தர் கெளதம புத்த ரென்றும், சாக்கிய புத்தரென்றம் அடைகொடுத்து வழ ங்கப்படுவது கெளதமகோத்திரத்திலே சாக்கியர் குடி யிலே பிறந்தமை பற்றி யேயாம். அப்பெயர் வழக்குகள் தாமே முன்னும் புத்தர் களிருந் தார்களென்பதை நன்கு விளக்கும். இதனாலும் முன்னும் பெளத்தமதம் காலம் தோறும் தோன்றியழிந்ததென்பது இனிது பெறப்படும். இன்னும் கற்கால புத்தசாரிகளும் தமது புத்தர் முன்னும் பன்முறைகளிலே அவதாரம் பண்ணிப் பெளத்த மதத்தைப் போதித்தாரெனக் கூறுவார்கள். தேவாரத் திலே கெளதமபுத்தர் சாக்கிய புத்தர் என் னும் நாமங்கள் வருத பலன் றி, வாளா சாக்கியர், புத்தரென்றே வருதலா லும், சாக்கிய புத்தநாமங்கள் பிந்திய புத்தரது கோத்தி ரத் தலைவர்க்கேயுரியன வாதலாலும், அத்தலைவர் காலம் கலியுகாரம்பமே யாதலாலும், சம்பந்தர் காலம் காலா? ரம் வருஷங்களுக்கு முற்பட்ட 3 தடாம். இன்னோரன்ன பிரபல நியாயங்கள் பலவுளவாகவும் சிலாசாசனங்கொண்டு சிலராற் செய்யப்பட்ட கால நிச் சயம் சிறிதும் அங்கீகாரயோக்கியமுடையதன்று. சேர சோழ பாண்டியர்களுடைய பெயர்கள் அவ்வப் பரம்ப ரையிலுள்ளார் பலர்க்குரியனவாய் வருதலின், ஒருகா லத்திலே ஓரரசனாலே செய்யப்பட்ட சாசனத்தைக் கொண்டு அவனுக்கு முன்னே அப்பெயரால் விளங்கிய அரசர் பிறரில்லையெனத் துணிந்து அச்சாசன காலத் துக்கு முன்னே நிகழ்ந்த சம்பவங்களை அச்சாசன காலத்