பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தென்மொழி வரலாறு. என்னுந் தேவாரத்தாலும் நிச்சயிக்கப்படும் இடைச் சங்கத்திறுதிக்காலத்தில் வந்துற்ற பிரளயத்தைக் குறித் துத் தமிழ் என்பதனுட் கூறினார். திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிய தே வாரங்கள் பத்திச்சுவை கால்வதோடு வேதோபநிஷதசார ங்களும் வித்தியாசாதுரிய கற்பனாலங்காரங்களும் பொழி வன வாதலின் அவருடைய செந்தமிழ்ப்புலமையின் அந் தமிலாற்றலெல்லாம் பிறவழியிலே செல்லாது சிவபத்தி யிலும் சிவஞானத்திலுமே சென்றன. உலகியல் நெறி நிற்கும் சாமானிய வித்துவான்கள் போல, நிலையில்லாத உலகவின்பத்தைப் பெரிதென மதித்து மயங்கிப் பெண் சள் முகத்தைச் சந்திரனுக்கும், கூந்தலை மேகத்துக்கும் பல்லை முத்துக்கும், நம் தலைப் பிறைக்குமாக வின்னோ ரன்ன வுபமானங்களாலே புனைந்து மகிழ்கூராது, சிவத் தியானமும் சிவ தரிசனமுமன்றி மற்றொன்று முள்ளத்திற் கொள்ளாராய், ஞானக் குறிப்பினையுடைய சிவன் திருமே னியையும், அம்மேனியினுள்ள ஞான பூஷணங்களையுமே டுத்து அவைகளுக்கே உவமை கற்பித்து மகிழ் கூர்வர். அவ்வுண்மை , "செற்றுக்களிற்றுரிகொள்கின் றஞான்றுசெருவெண்கொம் றிற்றுக்கிடந்தது போலுமிளம்பிறை பாம்ப தனைச் (பொன் சுற்றிக்கிடந்தது கிம்புரிபோலச்சுடரிமைக்கு நெற்றிக்கண் மற்றதன்முத்தொக்குமா லொற்றியூரனுக்கே" என்பது முதலிய பாடல்களாலுணரப்படும். திருநாவுக்கரசு நாயனார் தீவிர தரசத்திநிபாதமுடைய ராய்ச் சிவானந்தமேலிட்டுச் சீவன் முத்தராயிருந்தவர். சிவானந்தமேலிடப் பெற்றோர் ஆனந்த பரவசமும் ஆட லும் அதிசயானந்த ஞானப்பாடலுமுடையராதல் இயல் பன்றோம். அது பற்றியே அவருடைய பாமாலையெல்லாம் AL 9