பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாறு. என்னும் திருமந்திரத்தாலும் காண்க. திருநாவுக்க ரசுநாயனார் அருளிச்செய்த - பாடல்களிலே வரும் வரு ணனை களெல்லாம் அவ்வத் தலங்களுக் கியல்பாகவுள்ள சிறப்புக்களை யே உள்ள உள்ள வாறெடுத்துரைக்குமன் றிக் கற்பித்துரையா. உள்ள உள்ளவாறு ரைப்பதிலும் ஒவ்வோ ரதிசயமும் தத்துவக்குறிப்பும் ஆராமையும் தோன்று மாறே கூறும். இன்னும் அவ்வருட்பாடல்கள், தத்துவ ஞானமும் பிரபஞ்ச வைராக்கியமும் எடுத்துக் காட்டி, முத்தி மேலிச்சையைக்கொ ளுத்து மாற்றல் பெரிதுமுடை வனவென்பது எடுத்துக்காட்ட வேண்டாம். அவற்றை ஒதுந்தோ றங் கேட்குந்தோறும், பிரபஞ்ச வெறுப்பும் சிவத்தின் மேல் விருப்புமே தலைப்படுபவன் றி அவை எனை ய புராணேதிகாசங்கள் போல நுண்பொருளைப் புதைத்துப் பருப்பொருளை வெளிப்படக் காட்டி உலகத்தை மயங்க வைப்பனவல்ல. ஆனந்தம் அரும்பி அருள் மலர்ந்து முத் திக்கனி பழுக்கும் பெற்றியினை யுடையன. கொடியரிற் கொடியனாகிய கூற்றுவன் சந்நிதிப்பட்டோர்க்கும் உறுதி யும் அஞ்சா நிலையுந் தரத்தக்கது தேவாரமொன்றுமே யாம். அச்சிறப்பு மூவர் தேவாரத் துக்கு மொக்குமேயா யினும் திருநாவுக்கரசுநாயனார் தேவாரம் வாக்குப் பொ லிவினாலுஞ் சிறந்து விளங்குவது. 'திருநாவுக்கரசு நாயனார் திருவாய்மலர்ந்தருளிய தே வாரப்பாடல்கள் ஐந்து லட்சத்து முப்பத்தேழாயிரம். அவற்றுள் அழிந்தன போக எஞ்சியுள்ளன மூவாயி ரத்து நா னூற்றெழுபத்தாறு. மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம். அரிமர்த்தன பாண்டி யற்காகக் குதிரை கொள்ளச் சென்ற வழியிலே சிவபெருமான் ஞானாசா ரியராகவெழுந் தருளிவந்து உபதேசஞ்செய் தாட்கொண்டருளப் பட்ட