66 தென்மொழிவரலாறு. சிவன் வலைவீசிய திருவிளையாடலை இவர் பன்முறை யெடுத்தெடுத்துத் திருவாசகத்திலோது தலால் வலைவீ சிய திருவிளையாடல் நிகழ்ந்த காலத்தையடுத்திருந்தன ரென்பதும், எந்து, அச்சன், அச்சோ, பப்பு என்பன முதலிய மலையாளச் சொற்களை அத் திருவாசகத்திலே பிரயோகித்தலால் மலையாளத்திருந்து வந்து பாண்டி நாட் டிலே குடிகொண்டவரென்பதும் அநுமிக்கக் கிடக்கின் றன. இச்சிவஞானச் செல்வர், சண்டீசரையும் கண்ணப்ப ரையும் தமக்கு முந்தினோராகவெடுத்துக் கூறி, அவர் பெருமையைப் புகழுவர். கன்றால் விழவெறிந்த கிருஷ் ணன் செயலும் திருவாசகத்திலெடுத்துக் கூறப்படுதலின் இவர் கிருஷ்ணன் காலத்துக்குப் பிற்பட்டவரென்பதற் கையஞ் சிறிதுமில்லை. திருநாவுக்கரசுநாயனாராலேயே தமது தேவாரத்திலே, நரியைக் குதிரை செய்த அற்புத மெடுத்துக்கூறப்படுதலால் அவர் காலத்துக்கு இவர் முன் னுள்ளவரென்பதற்கும் ஆக்ஷேபஞ்சிறிதுமில்லை. திருநா வுக்கரசுநாயனார் காலம், முன் னே சம்பந்தர் தேவாரம் என்பதனுட் கூறப்பட்டபடி நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள் ளது. அவர் க்கு இவர் முன்னுள்ள வராதலின் இவர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ள தெ ன்பது நன்கு துணியப்படும். அதுமாத்திரமன்று; திரு வாசகத்தினுள்ளே பிற் காலத்திலே அறியப்படாத அனேக சரித்திரங்களும், க்ஷேத்திரங்களும் எடுத்தோ தப்படலாலும், கண்ணப்பர் சண்டீசர்களைத் துதிப்பவர் திருஞானசம்பந்தர் முதலியோரைத் துதிக்காமையாலும், "சிரிப்பார் களிப்பார்தேனிப்பார் என்னுந் திருவாசகத் திலே தேனித்தல் என்னுஞ் சொல்வழக்கும், உவலை முத லிய அரிய சொற்களும் பிற்காலத்து வழக்கன்மையாலும், திருவாசகம் தேவாரத்துக்கும் கடைச்சங்கத்து நூல்க ளுக்கும் முந்தியதென்பது நன்றாகத் துணியப்படும்.
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/82
Appearance