பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 தென்மொழி வரலாறு. இனித் திருத்தொண்டத் தொகையினுள்ளே எடுத் தோதப்படாமையின், மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்திநா யனாருக்குப் பிற்பட்டவரெனச் சாதிப்பாருஞ் சிலருளர். அஃதறியாமையின் பாலதாம். அகஸ்தியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலியோரெல்லாம் சிவபத்தியிலும் சிவயோகத்திலுஞ் சிறந்த மெய்யடியார்களாகவும் அவ ரையெல்லாம் திருத்தொண்டத்தொகையினுட் கூறாமை யாது காரணமோ, அதுவே மாணிக்கவாசகரைச் சேர்த் தோதாமைக்குக் காரணமாம். முன்னர் வெளிப்படாத அடியார் வரலாறுகளே சேக்கிழாருக்கு அருளிச் செய்ய ப்பட்டனவன்றி முன்னே வெளிப்பட்ட சரித்திரங்க ளல்ல. மாணிக்கவாசக சரித்திரம் முன்னே ஆலாசியத் திற் கூறப்பட்டது. அது பற்றியே அவர் சரித்திரம் திருத் தொண்டத்தொகையிலும் பெரியபுராணத்திலும் கூறப்ப டாதொழிக்கப்பட்டது. அவ்வாறே அகஸ்தியர், பதஞ் சலி, வியாக்கிரபாதர்கள் சரித்திரங்கள் சிதம்பரமான்மி யத்திலும் பிறவற்றிலுங் கூறப்பட்டுக் கிடந்தமையின் அவையுமொழிக்கப்பட்டன. அற்றேல், சம்பந்தமூர்த்தி நாயனார் சரித்திரம் ஆலாசியத்திற் கூறப்பட்டிருக்கவும் மீளவும் பெரிய புராணத்திலும் திருத்தொண்டத்தொகை யிலும் கூறப்பட்டது யாதுபற்றியோவெனின், ஆலாசி யத்துள் அச்சரித்திரம் விரித்துரைக்கப்படாமையினெ ன்க. இதுவே திருத்தொண்டத்தொகையிலும் மாணிக்க வாசகர் எடுத்துக் கூறப்படாமைக்குக் காரணமா மெனக் கொள்ளுக. அது நிற்க, மாணிக்கவாசகர் இடையறாத சிவத்தியா ன முஞ் சிவபத்தியுமுடையராய் விளங்கினரென்பதும், அவருடைய சரித்திரம் முற்றுமுண் மையென்பதும் அவர் திருவாக்குக்களே வெளிப்படப் பகர்கின்றன. வாசனை