பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தென்மொழி வரலாறு கடைச்சங்கத்து நூல்கள். நற்றமிழ்ப்பாண்டி நன்னாட்டு நான் மாடக்கூடன் மாந கரில் அங்கயற்கண்ணியோடு அமர்ந்து வீற்றிருக்குந் திங்களங்கொழுந் தணிந்த சிவபிரானருளிய சங்கப் பல கை வீற்றிருந்து தமிழாராய்ந்த நக்கீரனார் முதலிய நல் லிசைப் புலவரும் அவர்ப்பொருவுமா உம் பிறரும் இயற் றியநற்றமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதி னெண்கீழ்க்கணக்கென்றிப்பாரில் வழங்கப்படும். நக்கீரர் முதலிய கடைச்சங்கப்புலவர் அகத்தியமென்னு முதனூ லினை யுந் தொல்காப்பிய முதலியவதன் வழி நூல்களையும் விழிகளாகக்கொண்டு முத்தமிழ் நன்றாராய்ந்து செந்தமி ழிலக்கியம் பல செய்திட்டார். அவரியற்றிய சங்கச் செந் தமிழிலக்கியங்கள் சொல்வளம். பொருள் வளந்துறுமிக் கற்போர் நெஞ்சங் கவர்ந்து மேனிலத்தோரும் விழையுநா னிலச் செவியமிர் தாய் இக பரநல்கி மிகவிளங்குவன. பிற் காலத்து நூ லு முரையுந் தமிழுலகம் பெட்புறச்செய்து தமிழா சிரியர் பெருமை பெறுதற்குச் செந்தமிழ்ப் பிர மாண வரம்பாய் நிலவா நின்றன இந்தச் சந்தச் செந்த மிழிலக்கியங்களெனின், - அவற்றின் றெய்வச் சொற்பொ ருட் சிறப்பு இப்பரிசிற்றென்று முற்றவெடுத்தியம்பல் எளிதன்று. (தி-பி-கை) பத்துப்பாட்டு. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல் லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப் பாட்டாம். திருமுருகாற்றுப்படை முதலிய இப்பத்தும், அறம் பொருள் இன்பம் வீடென்னு முனுதிப்பொரு