பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு 71 ணான்கனு ளொரோவொன்று நுதலியனவாயும், நல்லி சைப்புலவர் நாட்டியன வாயும், அகவற்பா விலக்கணமொ த்தனவாயும், ஒற்றுமையுறுசுலின் அவற்றைச் சங்கத் தார் பத்துப்பாட்டெனக் கோத்து ஒன்றாக்கினார். இவற் றுள், திருமுருகாற்றுப்படை உறுதிப்பொருணான்கனு Oறுதிக்கண்ண தாய்ச் சிறந்த வீடுபேறு நுதலுதலின் அதனை ஏனையொன்பது பாட்டுக்குஞ் சிரத்தானமாக்கி முதற்கட் கோத்திட்டார். திருமுறை செய்தருளிய நம் பியாண்டார் நம்பி இது வீடுபேற்றுறுதிப் பெரும்பயன் கூறுந் தெய் வப்பாட்டாதனோக்கிப் பதினொராந் திருமு றையிலெடுத்துக் கோத்துப் போற்றினார். இது கோத் தார் சங்கப்புலவரென்பது, நச்சினார்க்கினியர் மலைபடுக டாத்துள் "தீயினன்.ன வொண்செங்காந்தள் என்னுந் தொடர்க்கு எழுதியவுரையான றிக. திருமுருகாற்றுப்படை- இது குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியருளியது; வீடு பேறு வேண்டினானோரிரவலனை வீடுபெற்றானொருவன் முருகக்கடவுள் பால் ஆற்றுப்படுத்தலைப் பொருளாகக் கொண்டது. முருகாற்றுப்படை யென்பது முருகனி டத்து ஆற்றுப்படுப்பது என்றாம். முருகு என்னும் பண்புமொழி பண்பிமேனின்றது. ஆண்டை ஐ வினை முதல் விகுதி. இது முருகக்கடவுடிருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, குன்றுதோறா டல், திருவேரகம், பழமுதிர்சோலை யென்னுமாறு படைவீடுகளினும் ஊ ரூர்கொண்ட சீர்கெழுவிழவு முத லிய வற்றினும் வீற்றிருப்பனெனக் கூறி அக்கடவுள் பால் ஆற்றுப்படுக்கும். இது புறத்திணையியலுள் தா வினல்லிசை" யென்னுஞ் சூத்திரத்துள் "ஆற்றிடைக்காட்சியுறழத்தோன்றிப்