பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு 73 றிமையுடைய கொடிநிலை கந்தழி வள்ளியென்ற மூன்ற னுள், நடுநின்ற கந்தழி யியல்பு கூறினமையின், தேவர் பகுதியான பாடாண் பாட்டென் ற றிக. கொடிநிலை சீழ் த்திசையின் கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் செஞ்சு டர் மண்டிலம். கந்தழியிலக்கண மேற்கூறப்பட்டது வள்ளிதண்கதிர்மண்டிலம். இம்மூவகைத் தெய்வமும் தேவர்ப் பகுதியாய்ப் பாடாண்டிணைக்குரியலாமாறு, "கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுரீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்னும் புறத்திணையியற் சூத்திரத்தானறிக. வடு நீங்கு சிறப்பு பிறப்பிறப்பில் பெற்றி. பொருநராற்றுப்படை - இது சோழன் கரிகாற் பெருவள த்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது ; பரிசில் பெறல் வேண்டிய பொருநனொருவனைப் பரிசில் பெற்ற னொருவன் சோழன் கரிகாற் பெருவளத்தானிடத்து ஆற்றுப்படுத்தலைப் பொருளாகவுடையது. பொருநர் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர் பரணி பாடுவோரெனப் பலதிறத்தர். அவருள் ஈண்டுக் கூறி யோன் போர்க்களம் பாடுவோம். இப்பாட்டுக் கரிகால் வளவன் கொடை, பிரதாபம், நாட்டுவளம், நதிவளங் களை மீக்கூறும். இப்பாட்டுள் "அறாஅ யாணரகன் றலைப்பேரூர்ச் சாறு கழிவழிநாட்சோ றுநசையுறாது வேறு புலமுன்னிய விரகறி பொருந என முன்னிலையொருமையானெடுத்து, வெண்ணிற்றாக்கியவெருவருநோன்றாட் கண்ணார்கண்ணிக்கரிகால்வளவன் 10 .