தென்மொழிவரலாறு. றாணிழன் மருங்கில ணுகுபுகுறுகிக் தொழுது முன்னிற்குவிரா யின் " என முன்னிலைப்பன்மையான் முடித்தது. முன்னிலைசுட்டியவொருமைக்கிழவி பன்மையொடுமுடி.யினும்வரை நிலையின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் என் னு மெச்சவியற்சூத்திர விதிபற்றியென்பது இங்க னம் பொருநர் பாணர் விறலியர் என்றிவரை யாற்றுப் படுத்தற்கு விதி "கூத் தரும்பாணரும் பொருநரும்விறலியு மாற்றிடைக்காட்சியுறழத்தோன் றிப் பெற்றபெருவளம்பெறார்க்க றிவுறீஇச் சென்றுபயனெ திரச்சொன்ன பக்கமும் என்பது. இதன்கண், “ஆசிரியன டைத் தேவஞ்சி” என்பது பற்றி வஞ்சிமிகவும் வந்தன. இது பரிசில் வேண்டிய பொருகனைப் பரிசில் பெற்றானொருவன் அது வழங்குதற்குரியானின்னனென்று ஆற்றுப்படுத்தலின், மக்கட்பகுதியாகிய பாடாண் பாட்டென்றுணர்க. சிறுபாணாற்றுப்படை- இது ஏறுமா நாட்டு நல்லியக்கோ டனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடி யது. பரிசில் பெறவேண்டிய பாண னொருவனைப் பரிசில் பெற்றானொருவன் எறுமாநாட்டு நல்லியக்கோடன் பால் ஆற்றுப்படுத்து தலைப் பொருளாகக் கொண்டது பாணனெனினும் பாடுவோனெ னினுமொக்கும். பாணர் இசைப்பாணர் யாழ்ப்பாணர் மண்டைப்பாணர் எனப் பலதிறத்தார். இப்பாட்டிற்
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/90
Appearance