பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 75 "பொன்வார்ந்தன்ன புரியடங்குநரம்பி னின் குரற்சீறியாழிடவயிற்றழீஇ நைவளம்பழுநியாயந்தெரியாலை கைவல்பாண்மகன்கடன ஹிந்தியக்க வியங்காவையத்துவள்ளியோர் நசை இத் துனிகூரெவ்வமொடுதுயராற்றுப்படுப்ப முனி.விகந்திருந்த முதுவா யிரவல என வருதலின் இவன் யாழ்ப்பாணனென வறிக. இப்பாட்டு நல்லியக்கோடன் வி தரணமும், அவனகர்க ளின் வளமும், அவனரண்சிறப்பும், அவன் கொலுவீற் றிருப்பும், எழுவகை வள்ளல்களின் வரலாறும், பிற வும் மீக்கூறும். இது பரிசில் வேண்டிய பாண்மகனொரு வனைப் பரிசில் பெற்றானொருவன் அது வழங்குதற் குரியனின்னனென்று ஆற்றுப்படுத்தலின் மக்கட் பகுதியான பாடான்பாட்டென்றறிக. பெரும்பாணாற்றுப்படை - இது தொண்டைமானிளந்தி ரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. பரிசில் பெறவேண்டிய பாணனொருவனைப் பரிசில் பெற் றானொருவன் தொண்டைமானிளந்திரையனிடத்து ஆ ற்றுப்படுத்தியதைப் பொருளாக வுடையது. இவன் றொண்டைக் கொடியால் யாத்து விடப்பட்டுத் திரை யாற்றப்படுதலின், தொண்டைமா னிளந்திரையன் எனப்பட்டான். அது " இருநிலங்கடந்த திருமறு மார்பின் முன்னீர்வண்ணன் பிறங்கடையன்னோன் திரைதருமரபினுரவோனும்பல் என இப்பாட்டுள் வருதலானறிந்து கொள்க. புறங் கடையெனப் பாடமோதுவாருமுளர். இப்பாட்டுத்