பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. முன்னோர் பெருமையும் பாண்டி நாட்டின்கணுள்ள நானில வைந்திணைவளனு மதுரை மாநகர்ச் சிறப்பும் அவன் வீரமும் பிறவுமீக்கூறும். இது நெடுஞ்செழிய ற்கு வீடுபேறேதுவாகச் சான்றோர் பல்வேறு நிலையாமை அறைதலுணர்த்துதலின், பெருந்திணைப்புறனாயெழு ந்த காஞ்சிப் புறப்பாட்டென்றுணர்க. நெடுநல் வாடை- இது பாண்டியனெடுஞ்செழியனை மது ரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. கொற் றவையைப்பரவுவாள், செருவென்ற பாண்டிய னெடுஞ் செழியனைத் தணந்து வருந்துந் தலைவிக்கு வருத்தந் தீ ரிய வுன்றலைவன் பகைவென்று விரைந்து வருகவென்று பாவுதலைப் பொருளாகவுடையது. இது கூதிர்க்கால வியல்புந் தமியளான தலைவி வருத்தமிகுதியும் படை வீட்டிற் றலைவனிருக்குமியல்புமீக்கூறும். இது நெடுஞ் செழியன் மண்ணசையாற் சென்று பொருதலின், முல் லைப்புறனாயெழுந்த வஞ்சிப்புறப்பாட்டென்றும் வஞ் சிக்குக் கொற்றவை நிலையுண் மையின் இதன் கட் கொ ற்றவையை வெற்றிப்பொருட்டுப் பரவினாளென்று முணர்க. குறிஞ்சிப்பாட்டு - இது கபிலர் ஆரியவரசன் பிரகதத்த னைத் தமிழறிவுறுத்தற்குப் பாடியது. தலைவியினது வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கியறத் தொடுநிற்றலைப் பொருளாகவுடையது. இது மலைவள் னும் இல்லறநெறியுந் தம்பதி தம்முட்பேணுமன்பினீர் மையுங் கற்பின் சிறப்புமிக்கூறும். இது களவென்னும் கைகோள் பற்றி யெழுதலிற் குறிஞ்சிப்பாட்டென்று ணர்க. பட்டினப்பாலை -- இது சோழன் கரிகாற் பெருவளத்தா னைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. வேறு