பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. புலஞ்சே றனாடிய தலைவன் தலைவியைப் பிரிந்து வாரே னென்று தன்னெஞ்சுக்குச் செலவழுங்கிக் கூறுதலைப் பொருளாகவுடையது. இது சோழநாட்டினை யுங், கா விரியையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் ஆண்டு வை குங் கரிகாற் பெருவளத்தான் பெருவிரலையும் அவன் செங்கோலினையுஞ் சிறப்பித்துரைக்கும். இது அன் புறு கற்பாட்டியான தலைவியை வன்புறை குறித்துப் பிரிதலொழுக்கங் கூறுதலின் கற்பென்னுங் கைகோண் மேலதாயெழுந்த பாலைப்பாட்டென்றுணர்க. மலைபடுகடாம் - இது இரணிய முட்டத்துப் பெருங்குன் றூர்ப் பெருங்கௌசிகனார் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வே ணன்னன்செய் நன்னனைப் பாடி யது. இது பரிசில் பெறச் சமைந்த கூத்தனொருவனைப் பரிசில் பெற்றானொருவனன்னனிடத்து ஆற்றுப்படுத்தி யதைப் பொருளாகவுடையது. இவ்வாற்றான் இதனைக் கூத்தராற்றுப்படை யெனவும் வழங்குப. இது நன்னன் பாற்செல்லும் வழியினியல்பும், அவ்வழியிடத்துள்ள உண வின் றிறனும், அவன் மலையியல்பும், சோலையியல் பும், வண் மையும், ஆற்றலும், சுற்றத்தொழுக்கமும், நாளோலக்கமும், மற்றவன விரமென்னு மலையில் வீற் றிருக்கும் காரியுண்டிக்கடவுண் மகிமையும், அவன் முன்னோர் பெருமையுமீக்கூறும். மலையை யானைக்கும், மலையோசையை அதன் கடாத்திற்கும் ஒப்பித்து, மலை படுகடாம் என்று இப்பாட்டிற்குப் பெயர் கூறியவாறு, இதனுட் காண்க, இது பரிசில் பெறவேண்டிய பொருன னொருவனைப் பரிசில் பெற்றானொருவன் அது வழங்கு தற்குரியானிவனென்று நன்னனிடத் து ஆற்றுப்படுத்த வின் மக்கட் பகுதியாகிய பாடாண்பாட்டென்றுணர்க., பத்துப்பாட்டிற்கு மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையியற்றினர். இவ்வுரை, பத்துப்