தென்மொழி வரலாறு. "நல்லறிவுடைய தொல்பேராசான் - கல்வியுங்காட்சியுங்காசினியறியப் பொருடெரிகுறுந்தொகையிருபதுபாட்டிற் ) கதுபொருளென்றவனெழுதாதொழிய விது பொருளென்றதற்கேற்பவுரைத்தும் என்னும் நச்சினார்க்கினியருரைச் சிறப்புப்பாயிரத் தா னறியப்படும். ஐங்குறுநூறு - இதன் கடவுள் வாழ்த்துச் செய்தார் பார தம் பாடிய பெருந்தேவனார். முதனூறு செய்தார் ஓரம் போகியார். இரண்டா நூறுசெய் தார் அம்மூவனார். மூன்றாம் நூறு செய்தார் கபிலர். நாலா நூறு செய்தார் ஓத லாந்தையார். ஐந்தா நூறு செய்தார் பேயனார். இது மருதமுதன் முல்லையீறான வைந் திணைகளையும் பொரு ளாகவுடையதென்பது, “மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலர் - கருதிய பாலையோ தல்லாந்தை பன் முல்லை பேயனே . நூலையோ தைங்குறு நூறு என்பதனாலறிக. இது தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித் தான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை" பதிற்றுப்பத்து - இது பப்பத் தாக ஒவ்வொரு புலவர் சேரர்குலத்தாரைப்பாடியது. இது பற்றியே இத்தொ கை பதிற்றுப்பத்தென வழங்கப்படுகின்றது. பரிபாடல் - இது ஒருவகைப் பாவிசேடமாய் நூலுக்குப் பெயராயிற்று. இது எழுபது பாக்களை யுடையதாய் முறையே திருமால் செவ்வேள் கார்கோள் வையை
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/96
Appearance