பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


மாணி (இனிப்பை ரசித்தபடி) இந்தச் சீனியைவிட எனக்கு என்னுேட தெய்வயானைப் பொண்ணுதான் ரொம்ப ரொம்ப இனிக்கும்!... த ய்: (கரம்பற்ற வந்தவனிடமிருந்து விலகி) அத் தான்! அந்த நாளையிலே மணல் வீட்டைச் சாட்சி வச்சு எனக்குக் கையடிச்சுத் தந்தீங்களே, அந்த வாக்கு பலிச் சிட்டுது!... அதுக்குத்தான். உங்க வாய்க்கு சீனி போட் டேன்!...மச்சான், இனி நீங்க தாலியும் கையுமா வந்தாத் தான் என் கையைப் பிடிக்கமுடியும்!...ஆமா!...சொல்லிப் பிட்டேன்! அப்பத்தான், இந்தப் பூவத்தகுடி, நம்ப ரெண்டு பேரையும் நல்ல கண்ணுலே பார்க்க ஏலும்! . (தெய்வானையும் மாணிக்கமும் சிரிக்கிருர்கள். அச்சமயம், மாசிமலைத்தேவர் வயல்வெளியி லிருந்து திரும்பி இக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தபடி பின்வாங்கிச் செல்கிரு.ர்.) மாணிக், தெய்வான! உங்க அப்பாரு வெள்ளனவே வந்து நல்ல சேதி சொன்னங்க, நான் கொடுத்து வச்ச வன்!...நான் இப்ப போயிட்டு, அடுத்த கிழமை நம்ப கண்ணுலத்துக்குப் பரிசம்போட மாப்பிள்ளைக் கோலத் தோட வந்து சேர்றேன்! எல்லாம் இந்தக் கார்த்திகைக் குள்ளாற முடிஞ்சிடணும். நான் போயிட்டு வாரேன், தெய்வானை. - . . . . . - (நாணம் பூத்து, அவன் செல்வதையே அவள் இமைக்காது பார்த்தபடி நிற்கிருள் . காட்சி 3 (காலைப் பொழுது, வீதியில் 'ஸ்கிப்பிங் கயிற் றைச் சுற்றியவாறு சிறுமி அல்லி வந்து கொண்டிருக்கிருள்.) . - - கோதண்டம் : (தவளைப் படம் போட்ட நவநாகரிக உடை, கூலிங்கிளாஸ் காமிரா சகிதம் கையில் பெட்டி