பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


தெய்: இப்ப சொல்லுங்க! மாணி: நீ என் பக்கத்தில் இருக்கிறதின்ன, அந்தத் தெய்வானைப் பொண்ணைக் கூப்பிடலை, நீ இல்லாத, நேரத்திலே, எனக்குப் பொளுது போறதுக்குப் பேச்சுத் துணைக்கு அப்பாலே அழைச்சுக்கிடுறேன்!...தெய்வானை, நான் எம்பிட்டு அதிஷ்டக்காரன் தெரியுமா?...ஒரு தெய் வான நேரிலே பேசவும், இன்னொரு தெய்வானை நெனை விலே பேசவும் கிடைக்கிறது எம்மாம் அதிசயம்...? தெய்: (பெருமூச்சுடன்) ம்!...ரெண்டு அவதாரம் எடுக்கற தெய்வமா ஆக்கிப்பிட்டீங்களே என்ன? மாணி: பின்னே என்னவாம்?. நீதானே என் தெய்வம்?... தெய்: ஊஹ-ம்ை, நீங்கதான் என்னுேட தெய்வம் !. மாணி: அம்மாடி, நான் தெய்வமா மாற மாட்டேன். அப்புறம் நீ வரம் கேக்க ஆரம்பிச்சிருவே? - தெய்! நீங்கதான் அஞ்சு வயசிலே அறியாப் பரு. வத்திலே எனக்கு வரம் தந்து தெய்வமாயிட்டீங்களே, மச்சான்!..அடடே, மறந்துட்டேனே!...அத்தான், உங்க வாயைத் திறங்களேன்!..." - மாணி என் வாயிலே மண்ணைப் போட்டுப்பிட்டு ஈரேழு உலகத்தையும் காட்டச் சொல்லப் போறியா? அய்யய்ய!...நான் மாயக்கண்ணன் இல்லியே! தெய்: நையாண்டி பண்ணுதீங்க, மச்சான்!...இந்தாப் பாருங்க, இந்தச் சீனியை உங்க வாயிலே கொட்டி என்னுேட கடவுளைக் கும்பிடப் போறேனுக்கும்! மடியிலிருந்து சினிப் பொட்டலத்தைப் பிரித்து அவன் வாயில் கொட்டுகிருள்) .