பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 5 வேலன் வேலாயி தம்பதிகள் வீடு |வேலாயி அரிசி புடைத்துக்கொண்டிருக்கிருள். இன்னொரு பக்கத்தில் குழந்தையை வைத் துக்கொண்டிருக்கிருன் வேலன். குழந்தை கத்தத் தொடங்குகிறது.) வேலன் : காணுத கோயிலுக்கெல்லாம் காணிக்கை செலுத்தி நான் பெத்த புள்ளே அழுகுது. ஒடியாலே பொண்ணு! வேலாயி : ஆத்தாடியோ! மூச்சுப் பறியற நேரத்துக் குள்ளே முழுப் பூசணிக்காயையே சோத்திலே மறைச் சிட்டீங்களே, மச்சான்?-- வேலன் : என்ன வேலாயி-புதிர் போடறே? வேலாயி : நானு புதிர் போடறேன்!-சரி, சரி!நான் பெத்த மகனை இங்கிட்டாலே கொண் டாங்க!. . வேலன் , ஒஹோ!-புரியுது புரியுது. இந்தா தாயே நீ பெத்த பிள்ளை! - (வேலாயி குழந்தையை வாங்கி 'நீலவண்ணக் கண்ணு வாடா!' என்ற பாடலின் சில வரிகளைப் பாடுகிருள்.1 வேலன்: வேலாயி, ஒனககுக் கோடிப் புண்ணியம் கெடைக்கும்; அதுக்கு மேற்கொண்டு நீ பாடாதே!--