பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

. விருந்துக்கு சாமான் எல்லாம் வாங்கறதுக்கு நாளைக்கு அறந்தாங்கி செவ்வாச்சந்தைக்கு மாப்பிள்ளை போருங்க; நானும் கூடப் போறேன்! பாவம், அவுகளுக்கு என்னைத் தவிர யாரு நாதி?...என்னமோ, என் அக்காளுக்கும் அத்தானுக்கும் கொடுத்த சொல்லை காப்பாத்திட்டேன். ம்!...உங்கம்மா உசிரோட இந்நேரம் இருந்திருந்தா, எம்பிட்டோ பூரிச்சுப் போயிடுவா! - தெய் : அம்மா, அத்தை, மாமன் அல்லாரும் எங்க கண்ணுலத்துக்கு வந்து அட்சதை போட்டு வாழ்த்து வாங்க அப்பா! மாசி : கட்டாயம் ஆசீர்வாதம் பண்ணுவாங்க!செத்துத் தெய்வமான வங்களாச்சே!. .கார்த்திகை கடை சிக்குள்ளாற பரிசம் போட்டு முடிஞ்சுதான, அப்பாலே மார்கழி மாசம் நடுவிலே இருக்குது. தை மாசத் தொடக் கத் திலேயே முகூர்த்தத்துக்கு தேதி வச்சுப்புடனும்! தெய் : கண்ணுலச் செலவுக்குப் பணம் காசு தயார் பண்ணிப்பிட்டீங்களா அப்பா? - மாசி : இந்தப் போகத்திலே விளஞ்ச குறுவையை அப்படியே புதுக்கோட்டைச் சந்தையிலே வித்திடனும்: கடலை பிடுங்கினதும், அதிலே கொஞ்சம் தேறும்; கஞ்சித் தண்ணிக்கு சம்பான்தாக்கை மட்டும் கைகாவலுக்கு. வச்சிக்கிட்டு, சொச்சம் இருக்கிற ஆதி பிரமர் துண்டை யும் விலை பேசி வித்திடப்போறேன். எல்லாம் சேர்ந்து ஆயிரம் ருவா கைக்கு கெடைக்கும். கொட்டு முழக் கோட, பொய்க்கால் குருதை காந்த விளக்கோட், பருப்பு பாயசத்தோட தடபுடலா உங்கண்ணுலத்தை நடத்திப் புடுவேன். ராசாத்தி...ம்: கார்த்திகை கடைசித் தேதிகூட கண்ணுலத் தேதிதானம்! அன்னிக்கே பரிச்ம் போட்டுப் பிடலாம்னு மாப்பிள்ளே சொன்னக |தெய்வான உணர்ச்சிப் பெருக்குடன் மெய்ம் மறந்திருக்கின்ருள்.)