பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


கோதண்: ( மெல்ல தனக்குள்) ஒ, மைலார்ட்'...பட்டிக் காட்டுக்கு வந்தும் பட்டனத்து வாசனை மறக்கமாட்டேங் குதே!. (உரத்த குரலில்) ஆமா, ஆமா....தெய்வானே தான்! தெம்மாங்கு பாட்டை ட்யூன் பண்ணுமப்பாடுமே! தங்கச்சி கல்யாணத்துக்கு பட்டணத்திலேயிருந்து ஆகாயக் கப்பலிலே வந்து இறங்கிடுவேன்! (தெய்வானை நாணியவாறு உள்ளே சென்று விடுகிருள், ! - மாசி: தம்பி, நின்னுக்கிட்டேயிருக்கீங்களே! கோதண்: (கைக்கடிகாரத்தைப் பார்த்து) மணி ஒன்ப தாகப் போகுதே! அப்படியான, அம்மா பெட் காப்பி தயார்ப் பண்ணியிருப்பாங்க! நான் போய்வாரேன்! (கைகளை உயர்த்தி விடைபெற்றுச் செல்லும் போது, வழியில் சிறுமி அல்லி கையில் குவளையுடன் எதிர்ப்படுகிருள்! அல்லி: குட்மார்னிங், அண்ணு! கோதண்: குட்மார்னிங் லிஸ்டர். ஆமா, கையிலே என்ன? தாங்க்யூ! சிக்கிரம் கொடு, குடிச்சாத்தான் எனக்கு நல்லா மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும்! (வாங்கிக் குடித்தவன் சடக்கென்று நின்று)...து!... நீராகரத் தண்ணி இது! . . . அல்லி: இதை நீங்க குடிச்சாத்தான் நம்ப கிராமப் பழக்க வழக்கத்தை மறக்காம இருப்பீங்க!...தேவர்கள் கடை ஞ்செடுத்த அந்த அமிர்தம் கூட இதுக்கு ஈடா காது.....அப்படின் னு எங்க அப்பா சொல்வாங்க! '. கோதண்: (கைகூட்பி) குட்டித் தெய்வமே! உன் திசைக்கு ஒரு கும்பிடு (தன்னுள்) ம்..ம் கோ...தண்டம்: