பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

ஒரு நாள்.

தை பிறப்பதற்குச் சில தினங்களே எஞ்சியிருந்த நேரம் அது.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வெளிவரவிருந்த படங்களின் பாடல்கள் சிலவற்றை வழக்கம் போலப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, ‘தெம்மாங்குத் தெய்வானை’ என்ற என்னுடைய ரேடியோ நாடகத்தைப்பற்றிய பேச்சை அவர் தொடங்கினார்; தான் அந்த நாடகத்தைக் கேட்டதாகவும், அதையே முழுநேர நாடகமாக ஆக்கித் தரும்படியும், தானே அதற்கு எல்லாப் பாடல்களையும் எழுதுவதாகவும் உற்சாகப்படுத்தினார். அவர் கொடுத்த அந்த உற்சாகத்தின் துணைகொண்டு, எனக்கே உரிய அந்தக் கிராமப்புறத்து மண்வாடை வீசும் வகையில், மிகவும் இயல்பானதோர் முறையில் இந்தத் ‘தெங்மாங்குத் தெய்வானை’யை உருவாக்கினேன். நாடகத்தை முடித்து அவரிடம் படித்துக் காட்ட எண்ணிய நேரத்தில், அவர் கதையை முடித்துவிட்டான் காலன். கவிஞர் கல்யாணசுந்தரம் உயிருடன் இருந்திருந்தால், ‘தெம்மாங்குத் தெய்வானை’ திரைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பாள்.

மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு.அ.ச.ஞான சம்பந்தம் அவர்கள் இதை வானொலியில் முதலில் அரைமணி நேர நாடகமாக நடத்தினார். பின்னர் அதை விரிவு படுத்தினேன். மேடைக்கேற்ற நாடகம் இது; நாட்டுப்புறச் சூழலில் முழுக்க முழுக்க அமைக்கப்பட்டது; அதீத