பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்வு நாடக வகைக்கு உட்பட்டது. தெய்வானையின் பாத்திரக் கட்டுக்கோப்பும் அவளது மனப்பக்குவமும் ஒரு புதிய கோணத்தில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். எனக்கு நிறைவு ஈந்த நாயகி அவள். அவளுடைய கண்ணீரோடு விதி விளையாடிய விசித்திரத்தை என்னால் மறக்கவே முடியாது.

‘அரவிந்தம்’ என்ற ஏட்டில் இதனை வெளியீட்டுப் பெருமை கொண்டார் அதன் ஆசிரியை.

இப்போது ‘தெம்மாங்குத் தெய்வானை’ நூல் வடிவம் பெறுகிறது. மேடைக்குகந்த நல்ல நாடகம் இது. விரும்புவோர் என் அனுமதி பெற்று நடத்தலாம். என் பெயரையும் தெய்வானையின் மனத்தையும் காக்கும் வகையில் நடத்த வேண்டும். இதன் மூலம் தமிழ் நாடக இலக்கியம் வளரவில்லையென்று ‘ஒச்சம்’ சொல்லிச் சோம்பித் திரியும் கும்பலின் மண்டையில் நன்கு அடிக்கவும் ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்!

இதனைச் சிறந்த முறையில் வெளியிடும் வானதி பதிப்பகத்தினருக்கு என் அன்பின் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் நான். ரசிகர்களின் தழைத்துச் செழித்த பேரார்வத்துக்குக் கைகூப்புகிறேன். கவிஞாின் நல்நினைவுக்கு இது நிவேதனம்.

பூவை. எஸ். ஆறுமுகம்.