பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெம்மாங்குத் தெய்வானை நாடக உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் மாணிக்கம் ,தெய்வான ,கோவிந்தம்மா ,கந்தசாமி ,வேலாயி, பவளக்கொடி ,மாசிமலைத்தேவர், அல்லி, கோதண்டம், பொன்னம்மா, காட்சி 1 திரை விலகும் போது, அழகு நிலா புறப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், "ஆத்தோரம் கொடிக்காலம்; அரும் பரும்பாய் வெத்திலையாம்: என்னும் தெம்மாங்குப் பாடல் ஆண் குரலில் எழுந்துக் காற்றில் மிதந்து வந்து ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறது. தென்னந் தோப்பின் மத்தியில் அமைந்த வீட்டின் வெளிப்பக்கத்துத் தூணில் சாய்ந்தபடி கனவு நிலையில் நிற்கிறாள் தெய்வானை, அப்போது: (சிறு வயதிலே அவளும் அவளுடைய மச் சான் மாணிக்கமும் மணல் வீடுகட்டி விளையாடி மகிழ்ந்த காட்சி உரையாடல் வடிவில் விரிகின்றது.) சிறுவன் மாணிக்கம்: ஆமா, தெய்வானே! இந்த மணல் வீடு சாட்சியாச் சொல்றேன்; நான் உன் னையே