பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


தான் கண்ணுலம் கட்டிக்குவேன்!...நம்ப குல தெய்வம் கட்டாயம் நம்பளோடே ஆசைக்கணுவைப் பலிக்க வைக்கும்!-ஆமா, அத்த மகளே!...என்னை நம்பு!... (அவன் அவளுக்குக் கையடித்துக் கொடுக் கிருன்.) நான் ஒனக்கேதான்!...நீ எனக்கேதான்! சிறுமி தெய்வானை: மெய்யாலுமா, அத்தான்?-அப் படியான நான் கொடுத்துவச்ச பொண்ணு தான்! (தெய்வான கனவுக்கோலம் கலைந்து கண் களைத் துடைத்துக்கொண்டு விழித்துப் பார்க் கிருள். ஆசை மச்சான் சொன்ன உறுதி மொழி நினைவு வந்ததும், சிரிப்பும் சேர்ந்து வருகிறது.) தெய்வானை: (கைகளை உயர்த்தித் தொழுது, தன்னை மறந்த லயந்தன்னில்) காளி ஆத்தா! எங்க ரெண்டு பேரையும் ஒண்ணுசேத்து வச்சிப்பிடு, தாயே! மேலைக்கு உன் சன்னதியிலே மாவிளக்கு செஞ்சு வைக்கிறேன். (அப்போது அவள் தந்தை மாசிமலைத்தேவர் வாசல் தட்டியை விலக்கியபடி உள்ளே நுழைகிறர்.1 தெய்: வாங்க அப்பா களைச்சுக் களைதாங்கிப் போய் வந்திருக்கிறீங்களே?. மூஞ்சியைக் கழுவிக்கினு சுருக்கா ஒடியாங்க; சுடுகஞ்சி காய்ச்சி வச்சிருக்கேன்! கூணிப்பொடி வறுத்திருக்கேன். பச்சைக் கொத்த மல்லித் தளையைத் துவையல் அரைச்சிருக்கேன். வெரசா வாங்க, அப்பா! . అréuజఉ35బf: தெய்வான கண்ணக் காதை அடைச்சிட்டிருந்த இந்தக் கிழத்தோட பசி அம்பிட்டும் நூந்து போயிடுச்சும்மா!