பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 15 மாசிமலைத்தேவர் வீடு |மாசிமலைத் தேவர் திருவாசகப் பாடல் ஒன் றைப் படித்துக் கொண்டிருக்கிரு.ர். நெற்றி யில் திருநீறு. ஹரிக்கேன் விளக்கு ஒளி) தெய்வானே. அப்பா, அப்பா! மாசி: என்னும்மா?. மனசிலே இருக்கிறதைச் சொல் அம்மா!,. தெய்: (வெட்கப்பட்டுப் பேசாமல் நின்ற பிறகு பேசுதல்) இந்தாங்க அப்பா, படம்! மாசி: அன்னிக்குச் சொன்னியே அதா?..தை மாசம் காணவேண்டிய காட்சியை இப்பவே கண்டிட்டேன்!... நீயும் உன் மச்சானும் படத்திலே ரொம்ப அழகாகயிருக் கிங்க...இதை முளும் மனுசங்க யார் கண்ணிலேயும் காட்டிப்புடாதேம்மா தெய்வானே! கண்திருஷ்டி விழுந் திடும்!... தெய்: சரிங்க அப்பா! மாசி: ரங்கூன் கப்பலிலே வந்திருக்கிற என் மச் சான் முத்தையாத் தேவரு என்னை அழைச்சாராம். போயிட்டு, அப்படியே காளி ஆத்தா கோயிலுக்குப் போயி துர்நூறு குங்குமம் கொண்டாரேம்மா!...இன் னைக்கு செட்டித் தெரு மண்டகப்படியாம்!