பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 25 கந்தசாமியின் வீடு (பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு தெய் வானை உட்கார்ந்திருக்கிருள். தன் உடலை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொள்கிருள். உடல் நிரம்ப நகைகள். * தெய்வானை: (தன்னுள்) எல்லாம் கடைசியிலே கன மாதிரித்தான் நடந்திடுச்சு; நடந்ததை மறந்திடத்தான் எத்தனப்படுகிறேன். ஆன, முடியலையே?.."(தந்தையின் பொருள் ஒன்றைக் கையிலெடுத்து)...அப்பா ஒங்களை இனிமே நான் எந்தப் பிறப்பிலே காணப்போறேன்?... அந்தக் காலத்திலே பாழாப்போன பணத்துக்கும் காசுக் கும் நம்ப வாழ்க்கையையே அடகு வச்சோம். இப்ப அதே பணம் எங்காலடியிலேயே அடைக்கலமாகக் கிடக்குதே!...(மாணிக்கம் அளித்த நினைவுப் பரிசான மோதிரத்தைப் பார்த்து) மாணிக்க மச்சான்!...நீங்க இனி இந்த ஊர்ப்பக்கம் வருவீங்களா, மாட்டீங்களா?...நீங்க தந்த பரிசப் பணத்தை அப்படியே வச்சிருக்கேன்!... என்னிக்கு வந்து வாங்கிடப் போறிங்களோ?...காளி ஆத்தா!...எனக்குக் கனவைக் காட்டிக் கடைசியிலே என்னைக் காளவாயிலே திணிச்சுப்புட்டியே, தாயே! [கண்கள் நீரைக் கொட்டுகின்றன; துடைத்துக் கொள்கிருள் தெய்வானை.) - அல்லி: அண்ணி அண்ணி! தெய்: வாம்மா!...நீ இருக்கிறது எனக்கு எம்பிட்டோ நிம்மதி! நீ ஒரு தரம் நாட்டியம் ஆடேன் மனசுக்கு ஆறுதலாயிருக்கும்! (அல்லி நடனம் ஆடுகிறள்)