பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


(நடனம் முடிந்து அல்லி திரும்புகையிே தெய்வானை மயங்கிக் கீழே சாய்ந்திருப் பதை உணர்ந்து அலறுகிருள்.). அல்லி: அண்ணுச்சி! அண்ணுச்சி! கந்தசாமி (ஓடிவந்து) என்னம்மா அல்லி! ஆ. தெய்வானை. . .(அவளைத் தன் மடியில் கிடத்தியவாறு) கண்ணேத் திற தெய்வானே! ..உன்னைக் கருத்தாப் பார்த் துக்கச் சொல்லிட்டு அப்பாவும் அம்மாவும் யாத்திரை போனங்களே! என்னம்மா செய்யிறது?...அல்லி கொஞ்சம் தண்ணி கொண்டா!...நாட்டு வைத்தியர் ஐயாவையும் கையோட இட்டுக்கிட்டு வா! (அல்லி கொடுத்த தண்ணிரை தெய்வானையின் முகத்தில் தெளிக்கிருன் கந்தசாமி.} தெய்: (கண்களை விழித்து எழுகிருள்.) அத். தான், ஒண்ணுமில்லே!...தலை சுத்துச்சு; அம்பிட்டுத். தான்.வாங்க சோறு சாப்பிடலாம். கந்தசாமி (சிரித்தபடி) நல்ல காலம், என்னைக் காப் பாத்தினயே, தெவ்வானே!...(கண்களைத் துடைத்து) இன்னிக்கு அந்திக்கு நாம்ப கீரமங்கலத்தை நாடி ரேக்ளா விலே படத்துக்குப் போகணும் குளிச்சு முழுகிக் கிளம் பறதுக்கு தயாராகயிரு! (தெய்வான மருண்டு நிற். கிருள்.) - அல்லி அண்ணி, அண்ணி; நீங்க பயப்படாதீங்க! உங்க ரெண்டு பேரோடே நான் வரல்லே! நீங்க போயிட்டு வாங்க!... - . . . 1.இருவரும் சிரிக்கிறர்கள்.).