பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 26 - (காளியம்மன் கோவிலில் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மணியோசையும், தாரை தப்பட்டை ஒலியும், பிறிதோர் இடத்தில் கும்.மியடிக்கும் சத்தமும் கரக ஆட்டமும் இடையிடையே ஜனங்களின் கசமுசப் பேச்சும் கேட்கின்றன.) பவளக்கொடி: (அதிசயத்துடன்) பொன்னம்மா இந்தக் காளி ஆத்தா கோயில் பக்கம் வந்ததும் நம்பளை யும் அறியாம நாம் தன்னலே இங்கே நின்னிட்டோம், கண்டியா? - - பொன்னம்மாள்: (பக்தி கனிய) ஆமா, அக்கா, எல் லாம் தாயோட மகிமையாக்கும் காப்புக்கட்டி முடிஞ் சிருச்சு; இனி தேரோட்டம் வரைக்கும் ஊரே திமிலோகப் பட்டுப் போயிடும்! - பவளக்கொடி மெய்தான், தங்கச்சி இங்கே வந்த தும், உனக்கு இன்ைெரு நினைப்பு வரலையா? பொன்னம்மாள்: இல்லியே, பவளக்கொடி அக்கா! என்ன நினைப்பு அது? - பவளக்கொடி அதோ முன்னடியான் சந்நதிக்கு எதிர்த்தாப்பில்ே கீத்துக் காவணம் போட்டிருக்கே.அதை நல்லாப் பார்த்துகிட்டே நில்லு எல்லாம் விளங்கும்! பொன்னம்மாள்: ஓகோ இப்பத்தான் எனக்கு எல்லாம் மட்டுப்படுது. அக்கா தேரோட்டத் திருநாள் அன்னிக்குக் கூத்து நடக்குமே, அதைத்தானே சொல்லுறே? . . . .