பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


போட்டாச் செவந்திடுச்சே, ஆசை அத்தானே! பூரிச்சுப் போவீங்களா, நேச மச்சானே" பொன்னம்மாள்: பலே!...தெங்மாங்குத் தெய்வானே தான் பாடுது: பாட்டுச் சொல்லிக் கொடுத்த அதும் மச்சானைக் கண்ணுப் பக்கம் காண முடியவில்லை. ஆன. தெய்வானை பழைய பாட்டை மறந்திடாம தன்னை மறந்து பாடிக் கிட்டுப் போகுது. அதைக் கூப்பிடட்டுமா, அக்கா? பவளக்கொடி: ஊஹ-ம்ை! தலைச்சுமையோட அவசர மாப் போகுது போலே, கூப்பிடாதே! பொன்னம்மாள்: சரி அக்கா! ம்...நடப்போமா? பவளக்கொடி (மெளனம்) பொன்னம்மாள்: (கைகளை மெல்லத் தட்டி) ஏ, அக்கா! எந்த லோகத்திலே இருக்கே? பவளக்கொடி: ம்!...கொஞ்ச நாழிகைக்கு முந்தி நாம் கண்ட அந்தப் பிரிஞ்சு போன பழைய நாடகக் கொட்டகை ஞாபகத்துக்கு வந்திச்சு. இப்போ இந்த தெய்வ்ானைப் பொண்ணு கண்ணுக்கு முன்னுடி தோணிச்சு! மாணிக்கமும் தெய்வானையும் கொண்ட காதல் நாடகம் மனசிலே ஒடிச்சு: ஊர் உலகம் எதுவும் இல்லே எனக்கு! பொன்னம்மாள்: ...அந்தப் பொண்ணு கண்ட கனவு தான் பலிக்காமப் போச்சு: இப்ப ஏதோ பழைய கனவை நினைச்சுப் பார்த்துப் பாடற பாட்டிலேயாச்சும் அதுக்கு மனசு ஆறுதல் கிடைக் கத்தான் வேணும். பவளக்கொடி கண்கொண்டு பார்க்க ஏலாத தெய் வானையோட அழகெல்லாம் அவ. அத்தான் மாணிக்கத்