பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


கந்தசாமி தெய்வானை, நான் போய் வரட்டுமா? தெய்: நல்லது, மச்சான், கத்திரிக்காய் மூட்டை, முருங்கக்காய் கட்டு, வாழைக்காய் தார் எல்லாம் கணக் குப் பார்த்துகிட்டீங்களா? - கந்தசாமி. ஒ. தெய்: பத்திரமா போயிட்டு வாங்க, மச்சான்! கந்தசாமி. நீ பத்திரமாக வீட்டைப் பார்த்துக்க தெய் வான களத்து மேட்டிலேயிருந்து போரடிச்ச நெல்லு மூட்டை வரும். உள்ளே ஒரு ஒரமாக அடுக்கச் சொல்லு. மாங்குடிக் கோருை கைமாத்துப் பணம் முப்பது கொண் டாந்து தருவாரு. அதையும் வாங்கி கள்ளிப்பெட்டியிலே வச்சுக்க. போனதும் வந்ததுமாத்'திரும்பிடறேன்! (கூட்டு வண்டி புறப்படுகிறது! காட்சி 28 (நாடக விளம்பர வண்டி தெரு வழியாகப் போய்க் கொண்டிருக்கிறது. ட்ரம்" சப்தம் கேட்கிறது-கடைசியில் கீழ்க்கண்ட வாச கம் ஒலிபரப்பப்படுகிறது.1 'பூவத்தகுடி காளி அம்மன் கோயில் தேரோட்டத் திருநாளன்று இரவு ராஜபார்ட் மாணிக்கம் நடிக்கும் 'கோவலன்-கண்ணகி சரித்திரம் நாடகம் நடைபெறும். இம்முறை தப்பினுல் மறுமுறை வாய்ப்பரிது. ஒரே ஒரு ஸ்பெஷல் நாடகம்!"