பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

. தெய்: உங்க உடம்பு படுமோசமா இளைச்சிருக்குதே மச்சான்? . மாணி: மனசு இளைச்சா, மேனியும் இளைக்க வேண் டியதுதானே, ம்...அது சரி, உன்னை ஒரு கேள்வி கேப் பேன், கோவிச்சுக்க மாட்டியே? - தெய்: நீங்க கேட்கப் போற கேள்வி எனக்குத் தெரியும்! வேலாயி மூலமா உங்ககிட்டச் சேர்ப்பிச்ச மோதிரத்தைப் பத்தித்தானே? மாணி. ஆமா, தெய்வானை. ஆத்தோரத்திலேயும் கழனி வெளியிலேயும் நாம ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்து வளர்த்த அன்புக்கு அடையாளமா இந்த மோதிரமாவது உன் வசம் இருக்கப்படாதா? என் மோதிரம் உன்னிடம் இருந்தா அதிலே என்ன தப்பு கண்டுபிடிக்க முடியும் ஊரும் உலகமும்? தெய். இந்த உண்மை என் புருசனுக்குத் தெரிஞ்சு தின்ன பனங்குலையைச் சீவுருப்பிலே எந்தலையைச் சீவிப் பிடுவாங்க! மாணி என் மோதிரம் இல்லைன்னு சொல்லிட்டாட போச்சு. இதை உன் கையிலே எப்பவும் போட்டுக்கக் கூட வேணும்...பேழையடியிலே போட்டுவை, நம்ம அன்பு மாதிரி அதுவும் அடங்கிக் கிடக்கட்டும். (தழு தழுத்த குரலில்) இந்தா தெய்வான, மோதிரம் (மோதி ரத்தை எடுத்து நீட்டுகிருன் மாணிக்கம்) - தெய்: நல்லதுங்க .....உங்க மனசுப்படியே ஆகட் டும்! இப்ப நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?