பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


மாணி, அந்தக் காலத்திலே நீ மூச்சுவிடாமக் கேட் கிற கேள்விக்கெல்லாம் நானும் மூச்சுப் பறியாமப் பதில் சொன்னதில்லையா? கேளு, தெய்வான! தெய்: நீங்க கோவிந்தம்மாவைக் கண்ணுலம் செஞ்சிக்கிடப் போறிங்களாமே! எனக்கு ரொம்பவும் நிம்மதியாயிருந்துச்சு! . மாணி: நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன?யார் சொன்ன கதை இது? பொண்ணு வீட்டிலேயிருந்து ஆள் வந்தாங்க; ஆன நான் இன்னமும் முடிவு ஒண்னும் சொல்லி அனுப்பலேயே தெய்வானை! தெய்: சொல்லியனுப்பறதை நல்ல சேதியாச் சுருக்க அனுப்பி வைங்க. மாணி உன் பேச்சு புதுசாத் தோணுதே, தெய் வானை? தெய்: நல்ல வேளை, புதிராத் தோணுதின்னு சொல் லாம இருந்நீங்களே! மாணி என் மனசிலே ஒரே ஒரு உருவத்தைத் தான் நான் நித்தம் பார்க்கிறேன்; அது ஒண்ணுதான் எனக்கு இதமாயும் இருக்குது, அந்த உருவம் நீதான் என்கிறதை நான் சொல்ல வேண்டியதில்லை. தெய்: உண்டாத் தீரும் பசி, ஆளு, கண்டாத் தீருமா? நம்ம விட்ட குறை தொட்ட குறை எப்படியோ அப்படித் தானே எதுவும் நடக்க முடியும்? நடந்ததைப் பத்தி அல்லும் பகலும் நினைச்சு உருகி என்ன பிரயோசனம்? மச்சான், என் பேரிலே உங்களுக்கு இருக்கிற கள்ள மில்லா அன்பு மெய்தானே?