பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

, போட்டியும் பொருமையும் பூசலும் ஏற்பட்டுப் போச்சு; இனி கந்தசாமி ஆத்திரப்படுறதுக்கு என்ன இருக்குது? தெய்வானை, நம்ப கனவுதான் பலிக்கலே நம்ப பிள்ளைங் களாவது நம்ப ஆசைகளை நிறைவேத்த வேணுமா? நானே கந்தசாமிகிட்டே வந்து சொல்றேன். நீ எல்லாத் தையும் எடுத்துக்க, அவர் எதுவும் குற்றம் சாட்ட மாட்டாரு. - - தெய்: என் வீட்டுக்காரரை இன்னும் நீங்க முழு சாப் புரிஞ்சிக்கலை, மச்சான். உங்க மனசு கோணும மோதிரத் தையும் போட்டுக்கிட்டேன்; அது கணக்கிலே, சாமான் சட்டையும் எடுத்துக்கிறேன்! ஆன அவங்க காதுக்கு மட்டும் இந்தத் தாக்கலைப் போட்டிடாதீங்க! மானி: ஆகட்டும், தெய்வானை, மனசிலே கைவச்சுச் சொல்லுவேன்; இப்பத்தான் என் நெஞ்சு அமரிக்கையா யிருக்குது சரி, நான் போய் வாரேன்!...நாடகத்துக்குக் கட்டாயம் வந்திடு போயிட்டு வாரேன், தெய்வானை! (மானிக்கம் சீட்டி அடித்தவண்ணம் போகிருன்..!