உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 12

அது மூட நம்பிக்கை தான் ; என்றாலும் அதனால் நன்மைகள் விளைகின்றன ; புதிய நம்பிக்கைகள் தோன்றுகின்றன.

அந்த நம்பிக்கையை இந்த வேள்வி அவர்களுக்குக் கொடுத்து உதவியது : அதனைச் செய்ய ஏற்பாடு ஆகியது.

வேள்வித் தீமுன் ஒமம் எழுப்பப் புரோகிதன் ஒருவன் தேவைப்பட்டான் ; இன்னார் முன் இருந்து செய்தால்தான் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அதற்குக் காரணம் ;

கலைக் கோட்டு முனிவன் ஒரு ஆசான் இருந்தான் ; அவன் ஒரு நாட்டில் கால் அடி வைத்ததால் மழை பெய்தது என்ற செய்தி அவனுக்கு விளம்பரம் தந்தது.

இவன் காட்டு வாழ்க்கை வாழ்ந்து வளர்ந்தவன் ; பெண்கள் அவனைச் சந்தித்தது இல்லை; அதனால் அவன் சுத்த பிரமச்சாரி என்று பெயர் எடுத்தான்.