உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


முனிவரால் அறிமுகம் ஆகியது ;

வழி நெடுக ஆசிரமங்கள் ; அங்கங்கே தவசிகள்ஒதுக்குப்புறம் தேடி அங்கே தங்கி இருந்தனர்.


வாழ்க்கைக்கு அஞ்சி ஒடுவதற்கு வழிகளைத் தேடுபவர் பலர் சிலர் குடி மயக்கம் தேடுவர் ; சிலர் பெண் முயக்கம் நாடுவர் ; ஒரு கோப்பையிலே மது;மறு அணைப்பிலே அழகிய மாது; இதுவும் தப்பி ஓடும் வழியே.

இந்த வாய்ப்பைத் தவற விட்டவர்கள் சந்நியாசிகள் என்று உபந்நியாசம் செய்யப் படுகிறது. மதம் என்பது அபின் என்பர்;அது மிகைப்பட்ட கூற்று; தப்பித்துச் செல்ல அது வழி தருகிறது ; இது முதியவர்களுக்குத் தேவை; குளிருக்கு அதில் பதுங்கிக் கொள்வர்.

இதனால்எந்தத் தீமையும்இல்லை; ஒதுங்கி வாழ அவர்களுக்கு இது வழி வகை செய்து தருகிறது.

வாழ்க்கை நெரிசல்கள் பல ; அவற்றில் புதைந்து போகாமல் தற்காப்புத் தருவதும் இந்தமதமே.