உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

|19


      மதம் வாழ்க்கையில் ஒரு கூறு.
       அதுவே வாழ்க்கை என்று கொண்டால்
       அது முழுக்க முழுக்க மதுச் சாறு :
       "கிக் வராமல் பார்த்துக் கொள்வது தக்கது.
 
       கல்லூரிகளில் ஒவ்வொரு விடுதிகளில்
       ஒரு பெயர் புதிது எழுதப்படுகிறது ;
       கவிஞர்களைப் போற்றுகிறார்கள் ; அதனால்
       கம்பர் இல்லம், இளங்கோ வளாகம்
       என்று அவர்களுக்குத் தங்க வீடு தருகின்றனர்.
 
       ஊர்களின் பெயர்கள் அவை
       மறு பிறவிகள் எடுக்கின்றன ;
       பம்பாய் மும்பை ஆகிவிட்டது.
       இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
       அது நமக்குத் தெரியாது.
 
       நேரு நகர் காந்தி நகர்
       இவர்கள் பெயரில் மாநகர்களை
       உரிமை செய்து தந்திருக்கிறார்கள் ,
       புதிய பெயர்கள் இடம் பெறுகின்றன ;
       மதராஸ் சென்னை ஆகிவிட்டது.
 
       காமாச்சிரமம் என்று ஒரு
       பெயர் ஒரு ஆசிரமத்துக்கு
       வழங்கியது ; இவர் யார் ?
  
       சிறை சென்று செக்கிழுத்த செம்மலா ?
       காதல் மன்னன் , டியூயட் நாட்டியன் ;
       அவனை மதித்துப் போற்றினர்.