உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தாடகையைச் சந்தித்தல்


        தண்டக வனம் என்ற இடத்தை
        மூவரும் அடைந்தனர் ; அது
        ஒரு கண்டனக் காடு ;
        மரங்கள் உலர்ந்து கிடந்தன.
        
        எங்கும் எலும்பும் கூடுகளும்
        சிதறிக் கிடந்தன ; சுடுகாட்டுச்
        சூழல் அது என்று அவர்களுக்கு
        அறிமுகப் படுத்தப் பட்டது.
        
        இந்தச் சூழலுக்கு யார்
        காரணம் ? இப்படிக் கொலைகள்
        செய்து அலைவுறுத்தியது யார் ?
        இந்த வினாவை இருவரும்
        கேட்டனர் விடை கூறுவதற்கு
        முன் பதில் அங்கு வந்து நின்றது.
        
        குண்டு வடிவத்தில் ஒருத்தி
        உருண்டு அங்கு வந்து நின்றாள் ;
        குண்டோதரி என்று அவளை
        அழைக்கலாம் : பயங்கரவாதி :
        தாடகை என்பது அவள் பெயர்.
        
       அங்கிருந்த தவசிகளை, வழிப்
       போக்கர்களை அடித்து வீழ்த்தியவள ;
       அக்கிரமங்களை ஆதியோடு அந்தமாகச் செய்தவள்.
       
       தவசிகள் வேள்விகள் செய்வதை
       அவள் தடுத்து ஒழித்தாள் ;
       இது கலாச்சாரப் போராட்டம்,
       அவை தேவையற்றவை என்பது அவள் கருத்து ;
       தவசிகள் காட்டில் ஆக்கிரமிப்பதைத் தடுத்தாள்.