உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

            22

அவள் சிரிப்பு கொக்கரிப்பு. கொடுமை மிக்கவள்;கொலை வெறி அவள் கண்களில் கனல் பொறி.

இதுவரை கொத்தவரங்காயைக் கண்டவள்; இப்பொழுது அவள் கண்டது பூசணிக்காய்கள்; அரச இளம் வாலிபர்கள்.

இவர்கள் இந்தத் தவசிகளுக்குக் காவலராக வந்து உள்ளனர்; கையில் வில்லும் அம்பும் தாங்கி உள்ளனர்;அதனால் அவர்களைக் கொல்லுதல் தேவை என்று தன் கைச் சூலத்தை அவர்கள் மீது எறிந்தாள்;அது இராமன் அம்புக்கு ஆற்றாது அலங்கோலப்பட்டது.

சூலம் முறிந்தது;அவள் ஒலம் இட்டாள் ; கைகளால் மோதி இவர்களைக் கொல்ல நினைத்தாள் ; அது அவளால் இயலவில்லை.

உயிர் தப்பி ஒட நினைத்தாள் ; அவள் செயலற்று நின்றுவிட்டாள் அவளை மன்னித்து விடுவதா ? மண்ணில் சாய்த்து வீழ்த்துவதா? இதற்கு விடை காண விசுவனை அவர்கள் எதிர்பார்த்தனர்.

"பெண்கொலை பாவம்தான்; ஆனால் இவள் வடிவால் பெண்; செயலால் அரக்கி; வீழ்த்தப் பட வேண்டியவள்" என்றார்,