பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 தேவர் : (ஒரே குரலாக) தேவ தேவா! எங்கள் வேண்டு கோளுக்கு இணங்கி அருள் பாலிக்க வேண்டும். நட நான் தான் சதா நடனம் செய்து கொண்டிருப்பவன் ஆயிற்றே! என் நடனத்தில் என்ன புதுமை இருக்கப் போகிறது? கார : தேவியுடன் ஆடும் போது தனிக்களேயே உண்டா கலாம். மகாதேவா! தேவி : சுவாமி! ஏன் தயங்கனும்? கட : எனக்குத் தயக்கமா? பாவம்! உனக்குச் சிரமம் ஏற். படக் கூடாதே என்றே யோசிக்கிறேன். தேவி : (ஏளனமாக நகைத்து) எனக்குச் சிரமமா? நீங்கள் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லே. அம்பலத்துக்கு வாருங்கள்; ஆடலாம். நட : நீயே தயாராய் இருக்கிருய் என்ருல் நான் ஏன் தயங்க வேண்டும்? ஆடுவோம்; வா. (தேவர்கள் புடை சூழ நடராஜப் பெரு மானும் பராசக்தியும் பரவெளிக்கு வருகிருர் கள். நடராஜப் பெருமான் தன் வலது காலால் சதங்கையைச் சப்திக்க வைப்ப தன் மூலம் ஆடத் தொடங்கலாம் என்று சமிக்ஞை செய்கிருர். உடனே பராசக்தி ஆடத் தொடங்குகிருள். அதற்கேற்றற் போல நடராஜப் பெருமானும் ஜதி தாளத் துடன் ஆடத் தொடங்குகிருர், நாரதர் தம் பூராவாசிக்க கின்னரர் யாழ் மீட்ட, நந்தி மத்தளம் முழங்க இருவருடைய நடனமும் துரித காலத்தில் வேகத்தின் உச்சியை அடைகிறது. அம்பல வாணருக்குச் சிறிதும் சளைக்காமல் பராசக்தி ஆடுகிருள். நடராஜப்