பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தே 1 : அப்படியால்ை......? கட : தெற்கே திருமயிலாப்பூரில் என்னுடைய மெய்யன்பன் திருவள்ளுவன் இருக்கிருன், அவன் நெசவுத் தொழில் செய்து கொண்டிருப்பான். அவனேப் போய் கேளுங்கள்; குண்டலம் விழுந்த இடத்தைச் சொல்லுவான். Xகார : அப்படியே போய்க் கேட்கிருேம்; சுவாமி. பரா: பெருமானே! உங்களுடைய அளப்பரும் சக்தியை தெரிந்து வைத்திருந்தும், ஆணவத்தால் அறிவிழந்து உங்களோடு போட்டியிட்டு நான் மறுபடியும் அவமான மடைந்து விட்டேன். தாங்கள் கருனே கூர்ந்து என்ன மன்னித்து ஆட்கொண்டு அருள வேண்டும். (நடராஜப் பெருமானின் காலில் விழுந்து வணங்குகிருள்.) கட : (அவள் சிரத்தின் மீது வலக்கரத்தை வைத்து) என்னு டைய அருளும் ஆசியும் உனக்கு எப்போதும் உண்டு. எழுந்திரு; தேவி. (தேவர்கள் நம பார்வதி பதயே! ஹரஹர! மகாதேவா!’ என்று முழங்குகின்றனர்.) காட்சி-22 காலம் : காலே இடம் : வள்ளுவர் இல்லம் உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி, ஏலேல சிங்கர். (வள்ளுவர் தறியில் அமர்ந்து நெய்து கொண்டே தலையை ஆட்டியவாறு தமக் குள் ஏதோ சொல்லிக் கொள்கிருர், வியப்பு டன் வாசுகி இதைக் கவனித்தவாறே ராட் டையைச் சுழற்றி நூல் நூற்றுக் கொண் டிருக்கிருள்.)