பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வள் : வாசுகி ஒரு நாள் பன ஒலேகளைச் சீவி ஒழுங்குபடுத்தி ஏடுகளாக அடுக்கிவைத்திருந்தேனே! அவை பரண் மீது இருக்கும். எடுத்துக் கொண்டு வா! வi : அப்படியே கொண்டு வருகிறேன்; நாதா! (வாசுகி உள்ளே போகிருள். வள்ளுவர் வாய்விட்டு ஏதோ சொல்லுகிருர்.) வள் : (பாடுகிருர்.) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதந்றே உலகு. (இதற்குள் வாசுகி ஒலே எழுத்தாணியுடன் திரும்பி வருகிருள்.) வள் : இப்படி என் எதிரில் வந்து உட்காரு, வாசுகி ஒலேகளை ஒழுங்கு படுத்தி ஒன்றின் மேல் ஒன்ருக அடுக்கி வைத் துக் கொள். சில நாளாகவே என் சிந்தனை ஏதோ தீவிர மாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. உள்ளத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பாடு; பாடு’ என்று சொல்லி என்&ன ஊக்கிக் கொண்டே இருக்கிறது. இந்த மன எழுச்சியை என்னல் தாங்கிக்கொள்ள முடியவில்லே. இன்று காலையில் எழுந்ததும் என் உள்ளத்தில் இருந்து எழுவதை ஏட்டில் எழுதி வைத்து விடுவதென்று தீர்மானித்து விட்டேன். என் இதயக் குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கு வாசகம் இது. - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. இதை எழுதி விட்டு உன் இனிய குரலால் பாடிக் காட்டு. (வாசுகி தனக்குள் பாடிக் கொண்டே ஏட் டில் வள்ளுவர் சொன்ன திருக்குறளே எழுது கிருள். இச்சமயம் ஏலேல சிங்கர் வருகிருர், வள்ளுவருக்கு அருகில் வாசுகி அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு தயங்கி தடையிலேயே நிற்கிருர்)