பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வள் : சரி. மற்றவற்றை நாளேக்குப் பாடுவோம். இப்போது தான் ஏதோ ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்தது போல் இதயம் இலேசாக இருக்கிறது. மனம் பரவசத்தில் ஆழ்ந்து இருக்கிறது. ஏலே : (தம்மை மறந்து) உங்களுக்கு மட்டுமா ஐயா! மனம் பரவசமடைந்திருக்கு? கேட்போரையும் கூட அல்லவா ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தி விடக் கூடியதாய் இருக்கு? அம்மா சொன்னது போல் ஒவ்வொரு பாட்டும் கற்கண்டுத் துணுக்கு. இவற்றைப் பாடினுல் வாய் மட்டும் மணக்காது. நினைக்க நினைக்க நெஞ்சமும் இனிக்கும். வள் : ஏதோ குரல் கேட்கிறதே! யார் என்று பார்? வாசுகி! வா : (இருந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்து விட்டு) யா ரோ உங்களேத் தேடிக்கொண்டு வந்திருக்கிருப் போலி ருக்கு. (நாணத்துடன் உள்ளே போய் விடுகிருள்.) ஏலே : (அசட்டு நகை நகைத்தவாறு) ஹி!. ஹி!. நான் தான் ஏலேலசிங்கர். இந்த வழியாக வந்தேன். அப்படியே உங் களைப் பார்த்து விட்டுப் போகலாமென்று தோன்றிற்று. வள் : வாருங்கள், வாருங்கள். ஏன் வெளியிலேயே தயங்கி நிற்கிறீர்கள்? ஏலே : நீங்கள் முக்கியமான வேலையாய் இருக்கும் போது நான் இடை நடுவில் சமயசந்தர்ப்பம் தெரியாமல் வரலா மா? சிவபூஜையில் கரடி புகுந்தாற் போல, - வள் : அப்படியொன்றும் முக்கியமானது ஒன்றுமில்ல; ஏலேலசிங்கரே! - - ஏலே : நான் வரும்போது கேட்டுக் கொண்டுதான் வந்தேன்; உங்களுடைய அருமையான கவிதையை. கடவுள் வணக்கப் பாடல் போல............ . . ஆ1ள் : (அடக்கத்துடன்) ஏதோ பாடத்தோன்றியது. தொழில், களைப்புத் தோன்ருதபடி பாடலானேன். -