பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சலே : நீங்கள் அடக்கமாகச் சொல்லிக் கொள்வது போல், உடல் களைப்புத் தீருவதற்காக உற்சாக மூட்டும் பாட்டு மட்டுமல்ல; இது. பிறவிக் களைப்பையே அடியோடு போக் கக் கூடிய ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல்களாகும் இவை. தொடர்ந்து பாடுங்கள். இவ்வுலக மக்களுக்கு உப காரமாய் இருக்கட்டும். வள் : என்ன ஏலேலசிங்கரே! என்னை ஒரேயடியாய் உயர்த். திப் பேசுகிறீர்கள்? நான் சாதாரண நெசவுத் தொழிலாளி. ஏலே : நீங்கள் நெசவுத் தொழிலாளி தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனல், வெறும் பஞ்சு நூலால் துணி நெய்யும் நெசவாளியல்ல; சொல் என்னும் பஞ்சைக் கொண்டு பனுவலே இழையாக்கி நீங்களே சேயி: ழை போலிருந்து நூல் நூற்கும் உயர்ந்த நெசவாளி என் பதை இப்போது நீங்கள் பாடியுள்ள பாடல்களே எனக்கு. அறிமுகப்படுத்தி விட்டன. வள் : ஏலேல சிங்கரே! உங்களுக்குள்ள இலக்கியப் புலமை யைக் கொண்டு என்னைப்பற்றி உயர்வாகப் பேசத் தொ டங்கி விட்டீர்கள். வந்ததிலிருந்து நின்று கொண்டே இருக்கிறீர்களே! குறிச்சியில் அமருங்கள். நான் தறியில் இருப்பதால் வீடு தேடி வந்த உங்களை எழுந்து வந்து வர வேற்று உபசரிக்க முடியவில்லே. மன்னியுங்கள். ஏலே : மற்றவர்களேப் போல் நமக்குள்ளே சம்பிரதாய உப சாரத்துக்கு அவசியமில்லை, ஐயா! நான் முதலில் உங் களைப் பார்த்ததிலிருந்தே மற்றவர்களைப் போல் நீங்கள் சாதாரண மனிதரில்லை என்று உணர்ந்து கொண்டேன். உங்களுடைய அகன்ற நெற்றியும் ஒளிமிகுந்த கூரிய கண் களும் எடுப்பான மூக்கும் வளைந்த மோவாயும் ஒரு தனித் தன்மை வாய்ந்த பெருமகனாய் இருக்க வேண்டுமென்று. உணர்ந்து கொண்டேன். அதல்ை தான் நானே உங்கள் பால் நட்புறவு கொள்ள வந்தேன். - -