பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 வள் மிக்க நன்றி; ஐயா! செல்வத்தால் மட்டுமின்றி சிந்தனை யிலுைம் சீரியரான உங்களை உற்ற நண்பராகப் பெறுவதில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன். ஏலே : நம்முடைய நட்பு வளர் பிறை போல் வளருவதாக. நாம் நாடோறும் மாலேயில் சந்தித்து அளவளாவி மகிழ் வோம். இப்போது விடை பெறுகிறேன். (கைகூப்பி வணங்கி விட்டுப் போகிருர், பதிலுக்கு வள்ளுவரும் வணக்கம் செலுத்து கிருர்.) காட்சி-23 காலம் : முற்பகல் இடம் : வள்ளுவர் இல்லம் உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி, தேவர்கள். (திருவாலங்காட்டிலிருந்து தேவர்கள் வள் ளுவர் வீட்டிற்கு வருகிருர்கள். அச்சமயம் வள்ளுவர் உணவருந்துவதற்குக் கூடத்தில் அமர்ந்திருக்கிருர், வாசுகி அவருக்குத் தாலத்தில் பழைய சோறு படைக்கிருள். வள்ளுவரிடம் நடராஜப் பெருமான் சொல்லி யனுப்பிய குண்டலம் பற்றிய தகவலைக் கேட்டறிவதற்காக, தேவர்கள் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.) வள் : வாசுகி! விசிறியைக் கொண்டு வந்து வைக்கவில்லை யே? - - வா : பழையது தானே என்று பார்த்தேன். வள் : இருந்தாலும், விசிறி வேண்டியதுதான். வா : அப்படியால்ை கொண்டு வந்து விடுகிறேன், நாதா! (உள்ளே போகிருள்).