பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 (தேவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க் கின்றனர். வாசுகி விசிறியுடன் திரும்பி வரு கிருள்.) வா: கொண்டு வந்து விட்டேன்; நாதா! வள் : கொஞ்சம் விசிறி விடு, வாசுகி! வா : அப்படியே நாதா!. (விசிறுகிருள்.) (சுடு சோற்றிலிருந்து கிளம்புவது போல, பழையதிலிருந்து ஆவி கிளம்புகிறது.) வள் : (புன்னகையோடு) விசிறி எவ்வளவு அவசியம் என்று தெரிகிறதா? வாசுகி! வா : அறியாமையால் மறுத்துக் கேட்டு விட்டேன். மன்னி யுங்கள் நாதா! நீங்கள் எது சொன்னலும் தடை சொல்லா மல் கேட்கக் கடமைப்பட்டவள் என்பதை இது எனக்கு உணர்த்துகிறது. - (இது கண்டு தேவர்கள் பெருவியப்படை கின்றனர். வாசுகி தொட்டுக் கொள்ள ஊறு காய் முதலியவைகளை வைத்து விட்டு குவளையில் தண்ணிர் குறைந்திருப்பதைக் கவனித்து விட்டு கேணியில் நீர் முகந்து வர, புறக்கடைக்குச் செல்லுகிருள். அவள் தண்ணிர் முகந்து கொண்டிருக்கையிலே யே வள்ளுவர் கூப்பிடுகிருர்) வள்: வாசுகி! வாசுகி! எங்கே போய் விட்டாய்? (வாசுகி கணவனின் குரல்கேட்டவுடனேயே நீர் முகந்து கொண்டிருப்பதை அப்படியே விட்டு விட்டு ஓடோடி வருகிருள். கிணற்றுக்குள் சென்ற குடம் கயிற்றுடன் அந்தரத்தில் அப்படியே நின்று விடுகிறது. இதைப் பார்த்து தேவர்கள் பேராச்சரியம்