பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கொள்கிருர்கள். தன் வீட்டுப் புறக் கடைக்குத் தற்செயலாக வந்த கிள்ளுவ னும் இதைக் கண்டு வியப்புறுகிருன்.) கிள் : பூதகி பூதகி! இங்கே ஒடி வாயேன்! குடம் கயிறுடன் அந்தரத்தில் நிக்குது பார்! பூதகி : (இரைக்க இரைக்க வந்து) உனக்கு என்னுய்யா வந் துட்டது? திடீரென இப்பிடிக் கத்தறே? கிள் : அங்கே பாரு அதிசயத்தை. பூதகி : என்னது? (திரும்பிப் பார்த்து) ஒ! இதைப் பார்க்கத் தான் கூப்பிட்டியா! இந்த ஜால வித்தையையெல்லாம் எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேனே! கிள் : ஜால வித்தையா? யூதகி ஆமாம். நீ தறிக்குப் போயிட்டா எனக்கு வேறென்ன வேலே? வாசுகியும் அவள் ஆம்படையானும் நடத்தற கூத் தைத்தானே பார்த்துக்கினு இருக்கேன். கிள் : அப்பிடியா! பூதகி : ஆமாம். அவங்க செய்யறதெல்லாம் கண் கட்டு வித்தை. ஐயா! ஊரை ஏமாத்தருங்க. கிள்: ஆங். - - வள் : தண்ணிர்கொண்டு வரப்போளுயா? வாசுகி குவளையில் தான் நீர் இருக்கிறதே! நடையில் நிழல் ஆடுகிறது. யார் வந்திருக்கிறது என்று பார். - (வாசுகி வெளியே தலே நீட்டிப் பார்க்கிருள். முதலில் அவள் கண்களுக்கு தேவர்கள் இருப்பது தென்படவில்லே. உன்னிப்பாகப் பார்த்த பின்னர் தான் தேவர்கள் கும்பலாக நின்றிருப்பது அவள் கண்களுக்குப் புலணு கிறது.)