பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வன : நாதா! தங்களைப் பார்க்க யாரோ வந்து காத்திருப்பது போல் தோன்றுகிறது. (இதற்குள் வள்ளுவர் கை அலம்பி விட்டு நடைக்குப் போகிருர். அவரைக் கண்டதும் தேவர்கள் கைகூப்பி வணங்குகின்றனர்.) தேவர்கள் : (ஒரேகுரலாக) வணக்கம், வள்ளுவர் பெருமர்னே! வள் : வணக்கம். வாருங்கள். ஏது இவ்வளவு தூரம்? இந்த ஏழை வீட்டைத் தேடிக் கொண்டு. இப்படி வந்து அமருங் கள். - தே : (வள்ளுவர் காட்டிய ஆசனங்களில் அமர்ந்தவாறு) நட ராஜப் பெருமான் உங்களிடம் அனுப்பி வைத்தார். வள் : (வியப்போடு) என்ன நடராஜப் பெருமானு? என்னிட test? தே : ஆமாம். வள் எது விஷயமாகவோ? தே ; வேறென்றுமில்லை. நடராஜப் பெருமான் எங்கள் வேண்டுகோளின்படி தேவியோடு திருவாலங்காட்டில் நடனமாடினர். அவர் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தில் ஆட்ட வேகத்தினுல் அவருடைய காதில் இருந்த மகர குண்டலம் கழன்று எங்கேயோ போய் விழுந்து விட்டது. நாங்களெல்லாம் பல இடங்களில் தேடியும் அது கிடைக்க வேயில்லே. அது விழுந்து கிடக்கும் இடம் உங்களுக்குத் தான் தெரியும் என்று அம்பலவாணர் சொன்னுர். அதற் காகத்தான் உங்களை நாடி வந்திருக்கிருேம். வள் : அதிசயமாய் இருக்கிறதே! சிவபெருமானின் செவியை அலங்கரித்துக் கொண்டிருந்த மகர குண்டலம் விழுந்த இடம் உங்களுக்கே தெரியாமலிருக்க, ஏழை நெசவாளி யான எனக்கு எங்கே தெரியப் போகிறது?