பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வள் : அதல்ை என்ன? நீ போய்த் தூங்கு; வாசுகி! நான் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கு. உள்ளத்தில் கருத்து உருவாகும் போது அதை ஏட்டில் எழுதி வைத்துவிட் டால்தான் உறக்கம் வரும். வா : அது உண்மைதான். அல்லும் பகலும் ஒய்ச்சல் ஒழிவு இல்லேயே உடம்புக்கு நலிவு ஏற்பட்டு விடக்கூடாதே என்றே அஞ்சுகிறேன். நான் எழுதுகிறேனே! நீங்கள் சொல்லிக் கொண்டு வாருங்களேன். வள் : (புன்னகை செய்து) உனக்கு மட்டும் ஓய்வு வேண்டா மா? நீயுந்தான் அருணுேதயத்துக்குமுன் எழுந்திருந்தால் இரவு முதல் சாமம் வரை குடும்ப காரியங்களையும் கவனித் துக்கொண்டு நெசவுக்கும் உதவி செய்து கொண்டிருக்கி ருய், ஒரு நிமிடம் உட்காராமல். வா : நான் தானு நீங்கள்? வள் : (சிரித்து) உன்னை மட்டும் என்ன படைத்தவன் இரும் பாலா ஆக்கி வைத்திருக்கிருன்? வா : என்னேப்போன்ற பெண்கள் என்ன செய்தாலும் வீட் டுக்குள்ளிருந்து தானே செய்கிருேம்; ஆண்களாகிய நீங் களோ வெளியிலே போய் எத்தனையோ வேலேகளைக் கவ னிக்க வேண்டியிருக்கிறதே! வள்: அதல்ை, பெண்களேவிட ஆண்களுக்கு அலுவல் அதி கம் என்று சொல்லிச் சாதிக்கிருய். அதுதானே? வா: (நாணத்துடன்) ஆம், வள் : உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்; ஆணுக்கு ஒன்று, பெண்ணுக்கொன்று எனப் பேதம் பிரித்துப் பேசவேண்டாம் என்று. சமுதாயத்தில் ஆண் களுக்கு அவர்களுடைய உடல் இயற்கைக்கு ஏற்றபடி சில வேலைகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. அது போல, பெண்களுக்கும், அவர்களுடைய மெல்லியற்கைக் குத் தகுந்தவாறு வீட்டு வேலைகளை மட்டுமே கவனிக்கு