பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10? கிள் : இந்த வள்ளுவன் வளவள வென்று பேசத்தொடங்கி விட்டால் வாயை லேசில் மூடவே மாட்டானே! அன்ரு டம் இது ரோதனையா போச்சே! பூத : அலுத்துச்சலித்து வந்து கண்ணயரலாம்னு இந்தச்சனி யன்கள் இப்படி ராவெல்லாம் கூத்தடிக்குதுங்களே! கிள் : இதுக்கு என்ன செய்யறது? பூதகி! - பூத : உனக்கு எத்தனை நாளா சொல்லிக் கொண்டிருக் கேன்; நாங்க துங்கறதா என்ன? ஒரு நாள் தவருமே இராவுலே இப்பிடிக் காட்டுக்கூச்சல் போட்டுக்கினு இருக் கிறீங்களேன்னு வள்ளுவனேப் பார்த்து அதட்டல் போட் டுட்டு வாங்கன்னு. அதுக்குத் தைரியமில்லே! இங்கேயே என்னண்டே முணுமுணுத்துக்கிட்டு இருக்கே. கிள் : (யோசனையோடு) ஊம். - - பூத ஏன்? மச்சான்! நீ ஆம்பிளேயில்லே? இப்பிடித் தொடை நடுங்கிறியே! கிள் : உனக்கு விஷயம் தெரியாது.டி, வள்ளுவன் எங்க எச மானருக்கு மிகவும் வேண்டியவன். எப்படியோ செட்டி யாரை வசியம் பண்ணி வச்சிருக்கான், அதனுல்தான் யோசிக்கிறேன். பூத : யோசிக்க வேண்டிய விஷயந்தான், மச்சான்! வேல் போயிட்டா நம் வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாடணுமே? கிள் : எனக்குத் துக்கம் வருது விடிஞ்சு பேசிக்கலாம். நீ படு. ஆத : (ஏளனமாக) மூதேவி வந்துட்டாளா? தூங்கித் தொல்.