பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 காட்சி-25 காலம் : முற்பகல் இடம் : வள்ளுவர் இல்லம் உறுப்பினர் . வள்ளுவர், ஏலேலசிங்கர். (வள்ளுவர் தறியில் நெய்து கொண்டே பாடு கிருர். ஏலேலசிங்கர் வருகிருர்.) வள் இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. ஏலே : வணக்கம்; ஐயா! வள் : (நிமிர்ந்து நோக்கி) வாருங்கள்; ஏலேலசிங்கரே! ஏது இன்றைக்கு விபூதிபட்டையும் ருத்திராட்ச மாலேயும் பிர மாதமாக இருக்கு. பூஜை புனஸ்காரம்...... ஏலே : (வாயில் விரலே வைத்துக் கடித்து) வருகிற அவசரத் தில் ஜெப மாலையைக் கழற்றி வைக்க மறந்து விட்டேன். பூஜை செய்து கொண்டிருக்கையில் என் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதைப்பற்றிக் கேட்க வந்தேன். வள் : உங்களுக்கு என்ன சந்தேகம் அப்படி ஏற்பட்டது? 'யவன நாட்டிலிருந்து நாவாயில் வந்து சேர வேண்டிய சரக்குகள் இன்னும் வரவில்லையே! எப்போது தோமியார் கோயில் கரைக்குப்பத்துக்கு வந்து சேரும் என்ற விசாரமா? யாராயினும் நிமித்திகரை நாடிச் சென்ருல் அவர் சொல்லுவாரே! ஏலே : (வியப்புடன்) என் உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டி ருந்த இந்த எண்ணம் ஐயாவுக்கு எப்படித் தெரிந்தது? வள் : நீங்கள் சிவ பூஜை செய்யும் போது கூட உங்கள் சிந் தனயெல்லாம் குப்பத்துக்கரையை நாடியல்லவா இருந்: தது? உங்கள் முகத்தில் தேங்கியுள்ள கவலையை விபூதி பூச்சால் கூட மறைக்க முடியவில்லையே! அதை நான் தெரிந்து கொண்டதில் என்ன ஆச்சரியம்?