பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.05 வள் : (நகைத்துக் கொண்டே) உங்கள் மனம் மாறியிருக் கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு தேர்வு நடத்திப் பார்க்கலாமா? ஏலே என்ன எப்படி வேண்டுமானலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்; ஐயா! வள் : உங்களிடம் சுமாராக எவ்வளவு பொன் இருக்கும்: ஏலே : நான் கணக்கு வைத்துக் கொண்டதில்லை. தோராய மாகச் சொன்னல் தங்கப் பாளங்கள், நகை நட்டுக்கள் உட்பட ஆயிரம் வராகன்களுக்குமேல் இருக்கலாம். வள் : உங்கள் வீட்டம்மா அணிந்திருக்கும் நகைகளே விட்டு விட்டு மற்ற எல்லாப் பொன்னேயும் கட்டியாக்கிக் கடலில் எறிந்து விடுங்கள் எனச் சொல்லுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்விதமே செய்வீர்களா? ஏலே : ஒ! அப்படியே தயக்கமில்லாமல் செய்வேன். வள் : அப்படியால்ை சரி; நான் சொல்கிறபடி செய்யுங்கள், உங்களிடமிருக்கும் பொன் கட்டிகளே யெல்லாம் சதுரக்கல் போல் செய்து அதன் மீது உங்கள் பெயரைப் பொறித்துப் பின்னர் கடலில் எறிந்து விட்டு வாருங்கள். - ஏலே : இப்போதே போய் நீங்கள் சொல்லியபடியே செய்து விட்டு வருகிறேன், ஐயா! - " را வள் : (நகைத்து) போய் வாரும். - (ஏலேலசிங்கர் விரைந்து செல்கிரும்.)