பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İÜ6 காட்சி-26 காலம் : நள்ளிரவு இடம் : ஏலேலசிங்கர் மாளிகை உறுப்பினர் : கள்ளர்கள், ஏலேல சிங்கர், மரகதம். (ஏலேலசிங்கரும் மரகதமும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். திருடர் இரு வர் கன்னக்கோல் வைத்து வீட்டினுள் நுழை கிருர்கள்.) கன் 1 என்னண்ணேன்! ஒன்னுமே தெம்பட8லயே? கள் 2 : நல்லா எல்லாத்தையுந் துழாவிப் பாருடா! இங்கே இரும்புப் பெட்டி கூடக் காலியாத்தான் இருக்கு. கள் 1 : எச்சரிக்கையா எங்கேன எல்லாத்தையும் பதுக்கி வச்சிட்டிருப்பாங்களோ? கள் 2 : ஒருவேளை நாம திருடவர்றது தெரிஞ்சிருக்குமோடா? கள் 1 : நாம திடீரென்னுதானே திருட வந்தோம். யாரு சொல்லியிருக்கப் போருங்கண்ணேன்! கள் 2 : பூமியிலே புதைச்சி வச்சிருக்காங்களா? பாரு ஒருவன் தரையைத் தட்டிப் பார்க்கிருன். இன்னொருவன் மூல முடுக்கெல்லாம் ஆராய் கள் 1 : ஊஉம். ஒரு உருப்படியும் இல்லே, கள் 2 : பொன்னு பொருளுதான் இல்லேன்னலும் நகை நட்டு துணிமணிகூடவா இருக்காது? (சந்தடி கேட்டு ஏலேலசிங்கர் விழித்துக் கொண்டு ஓசை படாமல் தாழ்ப்பாளைத் திறந்து மெல்ல வெளியே எட்டிப் பார்க் கிருர்) -